ெரயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடங்களை சப்-கலெக்டர் ஆய்வு
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடங்களை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகாசி,
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடங்களை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
ரெயில்வே கேட்
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சாட்சியாபுரம் பகுதியிலும், சிவகாசி-விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் பகுதியிலும் ரெயில்வே கேட் உள்ளது.
இந்த ரெயில்வே கேட் வழக்கமாக ஒரு நாளைக்கு 8 முறை பூட்டி, திறக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தினமும் 3 முறை சென்று, திரும்பும் மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் தற்போது தினமும் 2 முறை மட்டும் சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயிலுக்காக திறந்து மூடப்படுகிறது.
முதல் கட்ட பணி
இவ்வாறு இயக்கப்படும் ரெயில்களால் சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரெயில்வே கேட்கள் அடிக்கடி மூடப்படுவதால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் குறைந்தது சுமார் 30 நிமிடம் வரை அங்கு காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரண்டு இடங்களிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்போதைய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் நாடாளுமன்றத்தில் பேசினார்.
அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றன. இதையடுத்து ஆட்சி மாறியதால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தற்போது மீண்டும் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
கருத்து கேட்பு கூட்டம்
இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக மக்களிடம் கருத்து கேட்பது வழக்கம்.
அதன்படி நாளை (8-ந்தேதி) காலையில் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியம் தலைமையில் நடக்க உள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைய உள்ள பகுதியை சிவகாசி சப்-கலெக்டர் பிருத்திவிராஜ், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story