ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2021 1:51 AM IST (Updated: 7 July 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, சாத்தூரில் சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி, 
சிவகாசி பஸ் நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைத்து ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யூ. அமைப்பினர் மாவட்ட செயலாளர் தேவா மற்றும் நிர்வாகிகள் சுரேஷ்குமார், மகேந்திரகுமார், ஆறுமுகம், ஜோதிமணி, பழனி, செல்வராஜ், சுந்தரராஜ், மோகன், கருப்பசாமி, லாசர், பால்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல சாத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து வட்டார சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் தங்கப்பாண்டி, சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் பாண்டியன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story