கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 July 2021 2:45 AM IST (Updated: 7 July 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி,
திருச்சி காந்திமார்க்கெட் சூரஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வடக்கு தாராநல்லூர் காமராஜ்நகரை சேர்ந்த தேவா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில் தேவா மீது ஏற்கனவே திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் 7 வழக்கும், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் 17 வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்து தெரியவந்தது. மேலும் அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பது தெரியவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தேவாவிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Next Story