வெளிநாட்டில் வசிப்பவர் போல் முகநூல் பக்கத்தில் அறிமுகமாகி இளைஞர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் பொதுமக்களை உஷார்படுத்தும் திருச்சி மாநகர போலீசார்


வெளிநாட்டில் வசிப்பவர் போல் முகநூல் பக்கத்தில் அறிமுகமாகி இளைஞர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்  பொதுமக்களை உஷார்படுத்தும் திருச்சி மாநகர போலீசார்
x
தினத்தந்தி 7 July 2021 3:16 AM IST (Updated: 7 July 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வசிப்பவர் போல் முகநூல் பக்கத்தில் அறிமுகமாகி இளைஞர்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் வசிப்பவர் போல்
முகநூல் பக்கத்தில் அறிமுகமாகி இளைஞர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் 
பொதுமக்களை உஷார்படுத்தும் திருச்சி மாநகர போலீசார் 
திருச்சி, 
வெளிநாட்டில் வசிப்பவர் போல் முகநூல் பக்கத்தில் அறிமுகமாகி இளைஞர்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இளைஞர்களை குறி வைத்து மோசடி

முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறி வைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்பட்டு வருகிறார்கள். முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்போல் அறிமுகமாகி நன்கு பழகுகிறார்கள். 

பின்னர் அந்த நபர், தான் இந்தியா வர இருப்பதால் தன்னுடைய பெரும் பணத்தை கொண்டு வர முடியாது. எனவே தன்னுடைய கோடிக்கணக்கான பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பார்சல் செய்து உங்கள் முகவரிக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிப்பார். பார்சலை பணம் கட்டி பெற்று கொள்ளுங்கள். நான் இந்தியா வந்தபின் என்னிடம் கொடுங்கள் என்று தெரிவிப்பார். அதை நம்பி நீங்களும் அவர்கள் கூறும் நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவீர்கள்.

சுங்கத்துறை அதிகாரி போல்

ஓரிருநாளில் உங்களது தொலைபேசியில் சுங்கத்துறை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு மர்ம கும்பலை சேர்ந்த நபர் உங்களை தொடர்பு கொள்வார். உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசு பார்சல் வந்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு சுங்க வரியாக சில ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை செலுத்த வேண்டும். இல்லையெனில் வெளிநாட்டு பொருட்களை அனுமதியின்றி இறக்குமதி செய்த குற்றத்துக்காக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று கூறி உங்களிடம் இருந்து பணம் பறிக்க அந்த கும்பல் செயல்படுகிறது. சுங்கத்துறையினர் தனிநபர்களை தொலைபேசி வாயிலாக அழைத்து வரி செலுத்த அறிவுறுத்துவது இல்லை. ஆகவே பொதுமக்கள் இது போன்று இணையவழி குற்றவாளிகளின் மோசடி வலையில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசார் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் பதிவில் தெரிவித்துள்ளனர்.

Next Story