சேலம் மாநகராட்சி பகுதியில்தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு-கட்டுப்படுத்தக்கோரி ஆணையாளரிடம் மனு

சேலம் மாநகராட்சி பகுதியில்தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு-கட்டுப்படுத்தக்கோரி ஆணையாளரிடம் மனு
x
தினத்தந்தி 7 July 2021 3:36 AM IST (Updated: 7 July 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே கட்டுப்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே கட்டுப்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தெருநாய்கள்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்துகின்றன. சிலரை கடிக்கவும் செய்து உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் சேலம் குகை நெய்மண்டி அருணாசலம் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர். 
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளை கடிக்கும் நிலை
சேலம் மாநகராட்சி 48-வது கோட்டத்திற்குட்பட்ட நெய்மண்டி அருணாசலம் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. இங்கு உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே தெருநாய்கள் அவர்களை துரத்தி, துரத்தி கடிக்க வருகிறது. இதனால் தெருவில் நடப்பதற்கே பொதுமக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் குரைத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டை விட்டு வெளியில் வரும் குழந்தைகளை தெருநாய்கள் கடிக்கும் நிலையும் உள்ளது. 
கட்டுப்படுத்த வேண்டும்
அதே போன்று சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் இருக்கும் ஆத்துப்பாலம் பகுதியிலும் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களை இந்த நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. மேலும் சாலையோர தொட்டிகளில் உள்ள குப்பைகளை இழுத்து வந்து நடைபாதையில் போடுகின்றன. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சேலம் மாநகராட்சி பகுதியில் தெருநாய்களை அப்புறப்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story