சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு மூடப்பட்டது
சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வந்த கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டு மூடப்பட்டது.
சங்ககிரி:
சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வந்த கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டு மூடப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரி
சங்ககிரி அரசு ஆஸ்பத்திரி 80 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை ஆக செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று அதிகம் பரவிய நேரத்தில் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரி முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. இதனால் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் சங்ககிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகள் பயன் அடைந்தனர்.
மூடப்பட்டது
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்கள் ஈரோடு மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வந்த கொரோனா வார்டு மூடப்பட்டது.
சங்ககிரி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக சேலம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இங்கு ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வில்லை என தெரிகிறது. இங்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடவசதிகள் உள்ளன.
எனவே கொரோனா சிகிச்சை மையத்தை மீண்டும் திறந்து, அங்கு உள்ளூர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story