பிளஸ்-2 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது


பிளஸ்-2 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 4:12 AM GMT (Updated: 7 July 2021 4:12 AM GMT)

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பரின் பிறந்த நாள் விழா கோவளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் தேனாம்பேட்டையை சேர்ந்த தோழியான 17 வயதான பிளஸ்-2 மாணவியை அழைத்து கொண்டு சென்றார். பிறந்த நாள் விழா முடிந்ததும் சந்தோஷின் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி விட்டனர்.

சந்தோசும், பிளஸ்-2 மாணவியும் தனிமையில் இருந்தனர். அப்போது சந்தோஷ் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அந்த மாணவியை சந்தோஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. போதை தெளிந்த மாணவி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தாயாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் இது குறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story