நாகை மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


நாகை மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 7 July 2021 3:31 PM IST (Updated: 7 July 2021 3:31 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

வாய்மேடு,

வாய்மேடு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் முன்னிலை வகித்தார். இதில் 355 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தகட்டூர் கோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர் செல்லமுத்து எழிலரசன் முன்னிலை வகித்தார்.முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோத், ஊராட்சி செயலாளர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தலைஞாயிறை அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஜீவிதா, சுகாதார ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இதில் கொத்தமங்கலம், அனந்தநல்லூர் பகுதிகளை சேர்ந்த 246 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிவேல், இளங்கோவன், ஊராட்சி செயலாளர் பிரேம், சுகாதார ஆய்வாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story