கோவில்பட்டியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
கோவில்பட்டியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஜோதி நகர் 2வது தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ராமசாமி (வயது 45). இவர் இங்குள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சோமசுந்தரி ( 42). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சோமசுந்தரி கணவருடன் கோபித்துக் கொண்டு ஆறுமுகநேரியிலுள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் ராமசாமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு ராமசாமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடலில் தீ பற்றிக் கொண்டதும் கூச்சல் போட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று அவரது உடலில் எரிந்த தீயை அணைத்ததுடன், இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story