தூத்துககுடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்


தூத்துககுடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 July 2021 6:03 PM IST (Updated: 7 July 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் மாணவ, மாணவிகள் கைகளில் தட்டை ஏந்தியபடி பங்கேற்றனர். போராட்டத்தில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story