வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகள், உறவினர்களுடன் வீடியோ மூலம் பேச சிறப்பு வசதி
கைதிகள், உறவினர்களுடன் வீடியோ மூலம் பேச சிறப்பு வசதி
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் ஏராளமானவர்கள் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கைதிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வீடியோ மூலம் பேச சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்ட நாளில், அனுமதிக்கப்பட்ட கைதிகள் சிறையில் உள்ள கணினி மூலம் அதிகாரிகளின் கண்காணிப்பில் உறவினர்களிடம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story