திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சலான் முறையில் அபராதம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சலான் முறையில் அபராதம்
x
தினத்தந்தி 7 July 2021 7:40 PM IST (Updated: 7 July 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சலான் முறையில் அபராதம் விதிக்கும் சோதனை ஓட்டம் நடந்து வருவதாக ேமாட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்ைக

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.கே. காளியப்பன் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி இ சலான் முறையில் அபராதம் விதிக்கும் சோதனை ஓட்டம் ஸ்பீடு ரேடார்கள் கருவி மூலம் செயல்படுத்தும் முகாம் நடந்து வருகிறது. திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் மற்றும் நாட்டறம்பள்ளி, வேலூர், பெங்களூரு ஆகிய சாலைகளில் இ சலான் வழங்கும் ஸ்பீடு ரேடார்கள் கருவி மூலம் வாகனங்களின் வேகத்தைக் கணித்து சோதனை செய்தனர். 

சாலை விதிகளின்படி அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள கிலோமீட்டர் வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். அதை மீறி அதிக வேகத்தில் சென்றால் இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறியதாவது:-

செல்போன் எண்ணுக்கு தகவல் 
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. விரைவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தபட உள்ளது. சாலை விதியை மீறும் வாகனங்களை வாகன எண் பதிவு செய்தால் வாகனத்தின் மாடல் எந்த நிறுவன வாகனம் சேஸ் எண், என்ஜின் எண், நிறம், உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பெற்றுவிட முடியும்.

அதேபோல் வாகன ஓட்டியின் லைசென்ஸ் எண்ணை பதிவு செய்தால் லைசென்சின் கால அளவு லைசென்ஸ் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட பல தகவல்களையும் பெற முடிகிறது. இந்தக் கருவி மூலம் வாகனங்களை வாகன எண்ணை மாற்றி போட்டு வேறு வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

இ-சலான் மூலம் அபராதம் விதித்தால் செல்போன் எண்ணுக்கு தகவல் சென்று விடும். அதைப்பார்த்து அபராதம் செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால் எப்.சி., சாலை வரி செலுத்த முடியாது வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடித்து அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story