போளூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 6,367 பேர் மீது வழக்கு. ரூ.3 லட்சம் அபராதம் வசூல்
போக்குவரத்து விதிகளை மீறிய 6,367 பேர் மீது வழக்கு. ரூ.3 லட்சம் அபராதம் வசூல்
போளூர்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.அறிவழகன் மேற்பார்வையில் போளூர், கலசபாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, ஜனார்த்தனம், மங்கையர்கரசி, பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஒட்டியது உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 6 ஆயிரத்து 367 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட து. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை 6 மாதங்களில் 25 ஆயிரத்து 621 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.16 லட்சத்து 71 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த தகவலை துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.அறிவழகன் கூறினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உடனிருந்தார்.
Related Tags :
Next Story