பெண்களை இழிவாக பேசுபவர் மீது நடவடிக்கைவெள்ளாளர் மக்கள் முன்னேற்ற கட்சி மனு

பெண்களை இழிவாக பேசுபவர் மீது நடவடிக்கைவெள்ளாளர் மக்கள் முன்னேற்ற கட்சி மனு
x
தினத்தந்தி 7 July 2021 8:47 PM IST (Updated: 7 July 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

பெண்களை இழிவாக பேசுபவர் மீது நடவடிக்கைவெள்ளாளர் மக்கள் முன்னேற்ற கட்சி மனு

திருப்பூர்
தேசிய வெள்ளாளர் மக்கள் முன்னேற்ற கட்சியினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பலர் எங்களது சமுதாயத்தை குறித்து அவதூறும் பரப்பியும், இழிவுபடுத்தியும் பேசி வருகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் கண்ணன் என்பவர் எங்களது சமுதாய பெண்களை மிகவும் இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
மேலும், பல்வேறு பதிவுகளையும் இட்டு வருகிறார். எனவே கண்ணன் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Next Story