திருப்பூரில் கோர்ட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி


திருப்பூரில் கோர்ட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 7 July 2021 8:54 PM IST (Updated: 7 July 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கோர்ட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான நர்சுகள், டாக்டர்கள், செவிலியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் மாவட்டத்தின் புறநகர் மற்றும் மாநகர பகுதியில் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே திருப்பூர் கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நீண்ட வரிசையில் காத்து நின்று பலரும் தடுப்பூசிகளை செலுத்தி சென்றனர். இந்த பணிகளை டாக்டர் கலைச்செல்வன் பார்வையிட்டார். தேவைப்படும் அளவிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story