குன்னத்தூரில் காரில் குட்கா கடத்தியவர் கைது


குன்னத்தூரில் காரில் குட்கா கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 8:58 PM IST (Updated: 7 July 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூரில் காரில் குட்கா கடத்தியவர் கைது

குன்னத்தூர்:
குன்னத்தூர் பகுதியில் காரில் குட்கா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை குன்னத்தூர் போலீசார் பஸ் நிலையம் அருகே உள்ள நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அந்த  காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் டிக்கியில் ஹான்ஸ், கணேஷ், குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் 40 கிலோ  பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரையும் காருடன் குன்னத்தூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்த  வேல்முருகன் (வயது 40) என தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார், கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட  40கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். 
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும். இங்கு வந்து மொத்தமாக போதைப்பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் போதைப் பொருட்கள் யாரிடமிருந்து வாங்கி வருகிறார் என்றும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story