உடுமலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
உடுமலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
உடுமலை:
உடுமலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பஸ்கள் இயக்கம்
உடுமலை கிளை தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்கள் 58-ம், ஸ்பேர்பஸ்கள் 7-ம் என மொத்தம் 101 அரசுபஸ்கள் உள்ளன.கொரோனா ஊரடங்கில் அரசு கூடுதல் தளர்வுகள் அளித்துள்ளதன் அடிப்படையில் கடந்த 5-ம்தேதி முதல் பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உடுமலையில் முதல்கட்டமாக கடந்த 5-ம்தேதி வெளியூர் செல்லும் பஸ்கள் 20-ம், டவுன் பஸ்கள் 30-ம்எனமொத்தம் 50பஸ்கள் இயக்கப்பட்டன.கோவை, பொள்ளாச்சி, பழனி, திருப்பூர் ஆகிய வெளியூர்களில் இருந்தும் உடுமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வெளியூர்களுக்கு சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத்தொடர்ந்து உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழகத்தில் இருந்து நேற்று வெளியூர் சென்று வர, ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 20 பஸ்களுடன் கூடுதலாக 10 பஸ்கள் இயக்கப்பட்டன.
டவுன் பஸ்கள்
உடுமலையில் வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள்5-ம், டவுன் பஸ்கள் 19-ம் என மொத்தம் தனியார் பஸ்கள் 24 உள்ளன. இந்த தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் உடுமலையில்அரசு டவுன்பஸ்கள் 30 இயக்கப்பட்டுவரும் நிலையில் இந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை.சில நேரங்களில் சில வழித்தடங்களில்செல்லும் டவுன் பஸ்களில் கூட்டம் குறைவாக உள்ளது. சில வழித்தடங்களில் சில நேரங்களில்கூட்டம் அதிகமாக உள்ளது.
அதேபோன்ற நிலை நேற்றும் இருந்தது.டவுன்பஸ்சுக்காக பயணிகள் நேற்று மதியம் நீண்ட நேரம் காத்திருந்தனர்.அப்போது கிராம புறங்களுக்கு வெவ்வேறு வழித்தடங்களில் சென்றிருந்த 2 டவுன் பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக பஸ்நிலையத்திற்குள் வந்தன.அந்த பஸ்கள் வந்ததைப்பார்த்ததும், அந்த பஸ்களில் செல்வதற்காக காத்திருந்தவர்கள், பஸ்சில் இடம்பிடிப்பதற்காக, பயணிகள் நிழற்குடை பகுதியில் இருந்து அவசர, அவசரமாக ஓடினர்.
எதிர்பார்ப்பு
அதனால் தனியார் பஸ்களும் இல்லாத நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில்அரசு டவுன் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story