வாடகை பணம் கேட்ட டிராக்டர் உரிமையாளர் மீது தாக்குதல்


வாடகை பணம் கேட்ட டிராக்டர் உரிமையாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 7 July 2021 9:52 PM IST (Updated: 7 July 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே வாடகை பணம் கேட்ட டிராக்டர் உரிமையாளர் மீது தாக்குதல் 10 பேர் மீது வழக்கு

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கோதண்டபாணி(வயது 28). இவர் தனக்கு சொந்தமான டிராக்டர் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் மகன் அஜித்குமார்(23) என்பவரின் நிலத்தில் உழவு ஓட்டிக்கொடுத்தார். ஆனால் இதற்கான வாடகை பணம் தரவில்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வாடகை பணம் கேட்ட கோதண்டபாணியை அஜித்குமார் அவரது உறவினர்களான பிரபு, பழனிவேல், சந்தோஷ் குமார், சுந்தர் ஆகியோர் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோதண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். அதேபோல் கோதண்டபாணி அதிக வாடகை பணம் கேட்டு திட்டி, மிரட்டி தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக அஜித்குமாரும் புகார் கொடுத்தார். அதன் பேரில் இரு தரப்பை சேர்ந்த அஜித்குமார், கோதண்டபாணி உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story