வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில், உதவியாளர் மீது புகார்


வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில், உதவியாளர் மீது புகார்
x
தினத்தந்தி 7 July 2021 10:18 PM IST (Updated: 7 July 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில், உதவியாளர் மீது புகார்

ிருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 40). இவர் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
 அந்த மனுவில் அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த நிலோபர்கபில் மற்றும் அவரது உதவியாளரான பிரகாசம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.5 லட்சத்தை நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்தேன்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் பணத்தை பெற்ற முன்னாள் அமைச்சரும், அவரது உதவியாளரும் இதுவரை எனக்கு வேலை வாங்கித் தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் கொடுத்த பணத்தை மீட்டு் தர வேண்டும் என்று கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினர்.

Next Story