பொள்ளாச்சியில் ரோட்டோரத்தில் கிடந்த 1 ¼ டன் ரேஷன் அரிசி மீட்பு
பொள்ளாச்சியில் ரோட்டோரத்தில் கிடந்த 1¼ டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகள் மீட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ரோட்டோரத்தில் கிடந்த 1¼ டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகள் மீட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரேஷன் அரிசி மூட்டைகள்
பொள்ளாச்சி விஜயபுரத்தில் ரோட்டோரத்தில் அரிசி மூட்டைகள் கிடப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனி தாசில்தார் அருள்முருகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகன் மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு கிடந்த மூட்டைகளை அதிகாரிகள் பிரித்த போது, ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. ஆனால் ரேஷன் அரிசி மூட்டைகளை யார் கொண்டு வந்து போட்டார்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
1¼ டன் பறிமுதல்
இதையடுத்து அதிகாரிகள் 24 மூட்டைகளில் இருந்த 1¼ டன் ரேஷன் அரிசியை மீட்டு சரக்கு வாகனத்தில் ஏற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் ரோட்டோரத்தில் அரிசி மூட்டைகள் கிடந்தது தொடர்பாக குடிமைப்பொருள் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில்கார்டு தாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இதை பொதுமக்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
கேரளாவுக்கு கடத்த முயற்சி
கேரளாவுக்கு கடத்திச்செல்வதற்காக விஜயபுரத்தில் ரோட்டின் ஓரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து உள்ளது தெரியவந்து உள்ளது. எனவே அங்கு பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் விலையில்லாமல் வழங்கப்படும் ரேஷன் அரிசியை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்யும் நபர்களில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story