செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு


செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 7 July 2021 10:30 PM IST (Updated: 7 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.3 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கம்

ரூ.3 லட்சம் பறிப்பு

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வங்கியிலிருந்து ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவரது மகனை செங்கம் அரசு மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு நடந்து சென்றுள்ளார். 

செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்து சென்றபோது இவர் கொண்டு வந்த பணப்பையை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பறித்துக்கொண்டு ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் கூச்சலிட்டு உள்ளார். ஆனால் அந்தப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றதாக தெரிகிறது. 

போலீஸ் விசாரணை

இதுகுறித்து செங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதந்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும்  திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி நேற்று மாலை செங்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்தார்.

அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமரன், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

Next Story