அதிகாரிகள் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்கு


அதிகாரிகள் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 July 2021 10:40 PM IST (Updated: 7 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடி கிராமத்தில் மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு பரமக்குடி ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் துணை போவதாகவும் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து காட்டு பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேசன் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் என்பவர் மீதும் அந்த சுவரொட்டியை வடிவமைத்த பரமக்குடி எஸ்.எம். அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன் (வயது29) என்பவர் மீதும் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ராகவேந்திரன் கடையில் இருந்து லேப்-டாப், செல்போன் உள்பட கணினி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story