வேலூரில் தங்கும் விடுதிகளில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை


வேலூரில் தங்கும் விடுதிகளில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 7 July 2021 10:46 PM IST (Updated: 7 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

தங்கும் விடுதிகளில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை

வேலூர்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணங்களுடன் வங்காளதேசத்தினர் தங்கி உள்ளதாக புகார் எழுந்தது. அதேபோல், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் மேல்விஷாரம் போன்ற பகுதிகளில் முறைகேடாக தங்கி தோல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக தங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அதிகப்படியான வங்காளதேசத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே போலி ஆவணங்களுடன் வங்காளதேசத்தினர் யாராவது வேலூரில் தங்கியுள்ளார்களா? என மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் மத மோதல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் வேலூர் காந்திரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனை செய்தனர். மேலும் தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story