கிணற்றுக்குள் தவித்த மயில் குஞ்சுகள் மீட்பு


கிணற்றுக்குள் தவித்த மயில் குஞ்சுகள் மீட்பு
x
தினத்தந்தி 7 July 2021 10:47 PM IST (Updated: 7 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் தவித்த மயில் குஞ்சுகள் மீட்கப்பட்டன.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் கோகிலவாணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 40 அடி ஆழ கிணறு உள்ளது. அதில், 10 அடி வரை தண்ணீர் உள்ளது. 

இந்தநிலையில் நேற்று காலை அந்த கிணற்றுக்குள் இருந்து மயில் குஞ்சுகள் சத்தம் போட்டு கொண்டிருந்தன. இதனை கேட்ட கோகிலவாணன் அதிர்ச்சி அடைந்தார். 

கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது, உள்ளே பாறையில் 3 மயில் குஞ்சுகள் அமர்ந்திருந்து சத்தம் போட்டு கொண்டிருந்தன. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோதிராமலிங்கம் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு படையினர், அங்கு தவித்து கொண்டிருந்த 3 மயில் குஞ்சுகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

பின்னர் அந்த குஞ்சுகள், அய்யலூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அவர்கள், அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Next Story