மீனவர் கொலையில் மேலும் 3 பேர் கைது
மீனவர் கொலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மீனவர் பால்கண்ணன் (வயது26) முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த கதிரவன், ஜெயபால், சின்னதொண்டி வடவயலை சேர்ந்த முனியசாமி மனைவி சிவகாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி (36), தேவர்முத்து மகன்கள் சச்சின் என்ற சச்சின் நிதீஸ் (20) உள்பட மேலும் 3 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து கொலைசெய்யப்பட்ட பால்கண்ணன் அணிந்து இருந்த தங்கநகை கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story