மாவட்ட செய்திகள்

கூலித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு + "||" + Sickle cut for the mercenary

கூலித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கூலித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கம்பத்தில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி : 

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கம்பம் பச்சிமாங்குளம் முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் காவல் குடிசை அருகே தனது தம்பி வினோத்கண்ணன் மற்றும் நண்பர்களான கெஞ்சையன் குளத்தை சேர்ந்த ஜீப் டிரைவர் சுதாகர், காளீஸ்வரன் ஆகியோருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது சுதாகருக்கும், நவீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நவீனின் மார்பு பகுதியில் வெட்டினார். 

இதில் காயமடைந்த அவரை வினோத்கண்ணன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
2. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
3. விவசாயிக்கு அரிவாள் வெட்டு
மணிமுத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
4. குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு; மருமகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
குளித்தலை அருகே குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
சோழவந்தான் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.