பெண்கள், குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையம் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தொடங்கி வைத்தார்
பெண்கள், குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையத்தை 181 மற்றும் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இந்த உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தொடங்கி வைத்தார். இந்த உதவி மையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், மன நல டாக்டர் சத்தியமூர்த்தி, குழந்தைகள் நலக்குழுமம் ஹென்றி லாரன்ஸ், மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் நிறுவனத்தினரும் இணைந்து செயல்படுவார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவசர அழைப்புகளில் இருந்து வரும் புகார் சம்பந்தமாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்துவார்கள்.
இதற்காக அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மோட்டார் சைக்கிள், மடிக்கணினி வழங்கப்பட்டது.
முன்னதாக இந்த உதவி மையத்திற்காக நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story