கிணத்துக்கடவு சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு


கிணத்துக்கடவு சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 7 July 2021 11:01 PM IST (Updated: 7 July 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

காய்கறி சந்தை 

கிணத்துக்கடவில் உள்ள காய்கறி சந்தைக்கு கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்யும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.

இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகிறார்கள். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு அதிகரித்து உள்ளது. 

விலை கிடுகிடுவென உயர்வு 

அதுபோன்று வியாபாரிகளின் வரத்தும் அதிகரித்து உள்ளதால், காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்பனையானது. கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதுபோன்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. பச்சை மிளகாய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.15, அவரைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.50, பொரியல் தட்டைபயிறு ரூ.25, பீட்ரூட் ரூ.20, சுரைக்காய் ரூ.20-க்கும் விற்பனையானது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் உயர வாய்ப்பு 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தற்போது சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்து இருந்தாலும் தேவை அதிகம் என்பதால் அதன் விலை உயர்ந்து உள்ளது. 

சில நாட்களில் பக்ரீத் பண்டிகை வர உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றனர். 


Next Story