வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கும்கி யானைகள் அவதி
மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கும்கி யானைகள் அவதியடைந்து வருகிறது. மேலும் அதன் உடல் நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கும்கி யானைகள் அவதியடைந்து வருகிறது. மேலும் அதன் உடல் நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பாகுபலி யானை
மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக காட்டு யானை ஒன்று தனியாக சுற்றி வருகிறது. அதற்கு பாகுபலி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த யானை விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
ஆனால் இதுவரை பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எனவே இந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய அதை மயக்க ஊசி செலுத்தி பிடித்து ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
கும்கி யானைகள்
இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்துக்க உட்பட்ட டாப் சிலிப் முகாமில் இருந்து கும்கி யானைகளான கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 யானைகள் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அரசு வனக்கால்நடை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் பாகுபலி காட்டு யானையை கண்காணித்தனர். அந்த யானை வனப்பகுதியில் நின்றபோது மயக்க ஊசியை துப்பாகி மூலம் சுட்டனர். ஆனால் அது மயிரிழையில் தப்பி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
வெயிலின் தாக்கத்தால் அவதி
இதன் காரணமாக அந்த காட்டு யானையை பிடிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 3 கும்கி யானைகளும் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள அரசு மரக்கிடங்கு வளாகத்தில் உள்ள மரங்களின் கீழ் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மேட்டுப்பாளையம் பகுதியில் வெயில் அதிகம் என்ப தால் உஷ்ணம் தாங்க முடியாமல் கும்கிகள் சோர்வடைந்து களைப்புடன் காணப்படுகிறது. இதில் கலீம் என்ற கும்கி யானைக்கு காது மற்றும் வயிற்றின் கீழ்ப்பகுதியில் நீர்க்கட்டி களும், மாரியப்பன் வயிற்றுப்போக்காலும் அவதியடைந்து வருகிறது.
சிகிச்சை அளிக்க கோரிக்கை
இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த டாப்சிலிப் காலசூழ் நிலை வேறு, மேட்டுப்பாளையத்தில் உள்ள காலநிலை வேறு என்பதாலும், அங்கு பராமரிக்கப்பட்ட முறை வேறு, ஆனால் இங்கு பராமரிக்கப்படும் முறை வேறு என்பதால் 3 கும்கி யானை கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே அவற்றின் உடல்நிலை மேலும் பாதிக்கப்படுவதற்கு முன்பு மருத்துவக்குழுவினர் அவற்றின் உடல்நிலையை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவற்றை தினமும் நடைபயிற்சி அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story