ரூ.1 கோடி மதிப்பிலான எந்திரங்கள்


ரூ.1 கோடி மதிப்பிலான எந்திரங்கள்
x

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தது.

மன்னார்குடி;
ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தது.
ஆக்சிஜன் ஆலை
கொரோனா 2-ம் அலை நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய   நிலையில் தற்போது தொற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில் வருங்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனையான மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் நேற்று வந்தடைந்தது. 
கட்டமைப்பு பணிகள்
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) அமைப்பு பெங்களூருவிலிருந்து அனுப்பிய ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைக்கான எந்திரங்கள் நேற்று பெரிய லாரியில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது. நேற்று மாலை வரை எந்திரங்களை லாரியில் இருந்து இறக்கி வைக்கும் பணிகள் 
நடைபெற்றது. தொடர்ந்து எந்திரத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் இப்பணிகள் நிறைவடைந்து ஒரு வாரத்தில் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என மன்னார்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story