கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு


கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
x
தினத்தந்தி 7 July 2021 11:54 PM IST (Updated: 7 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டி குறுவள மையத்தில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். உதவித் தலைமையாசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியை கலைவாணி வரவேற்றார். இதில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பிரிவில் முதல் பரிசை வெங்கடாபுரம் நடுநிலைப் பள்ளி மாணவன் சச்சின் சின்னச்சாமியும், 2-வது பரிசை பள்ளி மாணவன் எஸ்ரேன் பெனடிக், 3-வது பரிசை இணுங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவன் இளவரசன் ஆகியோர் பெற்றனர். 9 மற்றும் 10-ம் வரை உள்ள பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சாதனா முதல் பரிசையும், பிரதீபா 2-வது பரிசையும், விஸ்வா 3-வது பரிசையும் பெற்றனர். முடிவில் அரவக்குறிச்சி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் முகிலன் நன்றி கூறினார்.


Next Story