கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மனு


கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 7 July 2021 6:25 PM GMT (Updated: 7 July 2021 6:25 PM GMT)

கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வைகநல்லூர், ராஜேந்திரம், திம்மம்பட்டி ஆகிய கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, கோட்டாட்சியர் (பொறுப்பு) தவசெல்வத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பியே குளித்தலை பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு மாதமாகியும் தங்கள் பகுதிக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாக உள்ளது. 
விவசாயத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. விவசாயத்திற்காக உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை என்றால் விவசாயிகள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே உடனடியாக விவசாயத்திற்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் (பொறுப்பு) தவசெல்வம் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசி விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story