விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2021 12:22 AM IST (Updated: 8 July 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசை கண்டித்து விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி உள்ளது. இங்கு தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது. இந்த அணையால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து  விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட செயலாளர் சவுரிராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தாண்டவராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி இளங்கோ, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர்கள் சகாபுதீன், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story