ரெயில் தண்டவாள கம்பி விழுந்து தொழிலாளி பலி


ரெயில் தண்டவாள கம்பி விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 July 2021 12:50 AM IST (Updated: 8 July 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே ரெயில் தண்டவாள கம்பி விழுந்து தொழிலாளி பலியானார்.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கள் மங்களம் நம்பி ஆற்றுப்பாலம் அருகில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் அலியூர்தூர் என்ற பகுதியை சேர்ந்த தீபக் (வயது 45) என்பவர் இரும்பு தண்டவாளங்களில் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

சம்பவத்தன்று பாலத்தின் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு தண்டவாள கம்பி ஒன்று சரிந்து தீபக் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story