ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அமீர்கான், கூமாபட்டி ஜியாவுதீன், இஸ்மாயில், ஆசாத், வீரர் அப்துல்லா, அப்துல் அக்கீம் சேட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
அதேபோல ராஜபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு மக்கள் நலக்குழுவினர் கருப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story