அணைக்கரை கீழணையில் இருந்து டவுன் பஸ் இயக்கம்
2 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கரை கீழணையில் இருந்து டவுன் பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது
மீன்சுருட்டி
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. அங்கிருந்து உபரிநீர் மேட்டூ்ர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழ்ணையில் இருந்து அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி கொள்ளிடம் கீழணை வழியாக வினாடிக்கு 2½ லட்சம் கன அடி வீதம் உபரி தண்ணீர் கடலுக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து அணைக்கரை கொள்ளிடம் கீழ்ணையின் பாதுகாப்பு கருதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் அணைக்கரை பாலம் வழியாக செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த வழியாக கனரக வாகனங்களை தவிர்த்து கார்கள் மற்றும் வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று அணைக்கரை கீழணையில் உள்ள 2 பாலங்களுக்கு இடையே டவுன் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனை அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார். புறநகர் பஸ்களை இயக்குவது குறித்து இன்னும் 3 அல்லது 4 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story