கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 8 July 2021 2:14 AM IST (Updated: 8 July 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்

பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலமுத்து (வயது 65). இவர் நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து  பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்

Next Story