பெங்களூருவில் ரவுடிகளை ஒடுக்க போலீசாருக்கு, கமல்பந்த் உத்தரவு
பெங்களூருவில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
கொலை சம்பவங்கள்
பெங்களூருவில் ஊரடங்கு காரணமாக குற்ற சம்பவங்கள் குறைந்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக முன்விரோதத்தில் கொலை நடப்பது, ரவுடிகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2 வாரத்திற்கு முன்பு முன்னாள் பெண் கவுன்சிலரை முன்விரோதத்தில் கொலை செய்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி நிறுவன அதிபர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இதுதவிர 2 ரவுடிகளும் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த கொலை சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் விதமாக நடந்திருந்தது. அத்துடன் பெங்களூருவில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ரவுடிகளுக்கு இடையே மோதிக் கொள்வது, கொலை செய்ய திட்டமிட்டுவதும் அதிகரித்து வருகிறது.
ரவுடிகளை ஒடுக்க உத்தரவு
இந்த நிலையில், பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்குவது குறித்தும் துணை போலீஸ் கமிஷனர்களுடன், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூருவில் சமீபமாக நடைபெற்ற கொலை சம்பவங்கள், ரவுடிகள் மோதல் குறித்து துணை போலீஸ் கமிஷனர்களுடன், கமல்பந்த் விரிவாக ஆலோசனை நடத்தினார். மேலும் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு, கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
கொலை சம்பவங்களில் ரவுடிகள் ஈடுபட்டு வருவதால், நகரில் உள்ள அனைத்து ரவுடிகள் மீது எப்போதும் கண்வைத்து கொள்ளும்படியும், அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படியும், ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் துணை போலீஸ் கமிஷனர்களுக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story