கேரளாவுக்கு வருகிற 12-ந் தேதி முதல் கர்நாடக அரசு பஸ்கள் இயக்கம்
கேரளாவுக்கு வருகிற 12-ந்தேதி முதல் கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
பெங்களூரு: கேரளாவுக்கு வருகிற 12-ந்தேதி முதல் கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
கேரளாவுக்கு அரசு பஸ்கள்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கர்நாடகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கேரளாவுக்கு கர்நாடக அரசு பஸ்கள் வருகிற 12-ந்தேதி முதல் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
12-ந்தேதி முதல் இயக்கம்
கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால், கேரளாவுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு, மைசூரு, பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்ககை அடிப்படையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெகட்டிவ் சான்றிதழ்
கேரளாவில் இருந்து அரசு பஸ்களில் கர்நாடகம் வர விரும்புபவர்கள், 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கும் வகையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும். அந்த சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பஸ்களில் கர்நாடகம் வர அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story