சப்-இன்ஸ்பெக்டரிடம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது


சப்-இன்ஸ்பெக்டரிடம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 2:29 AM IST (Updated: 8 July 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபரும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபரும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம்...

பெங்களூரு ஆர்.டி.நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஒருவர், கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பணி முடிந்ததும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரும் போது சப்-இன்ஸ்பெக்டரை, 3 மர்மநபர்கள் வழிமறித்தனர்.

பின்னர் அவரிடம் ஆயுதங்களை மிரட்டி மா்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர், போலீசார் என்பது தெரிந்ததும், 3 மர்மநபர்களும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மர்மநபர்களையும தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரையும் கைது செய்துள்ளனர். 

விசாரணையில், அவர்கள் பீனியாவை சேர்ந்த ரவிக்குமார், ஆசித்கவுடா, பாலு என்று தெரிந்தது. எளிதில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு 3 பேரும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அதுபோல், சப்-இன்ஸ்பெக்டரிடமும் கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. கைதான 3 பேரிடம் இருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

இதுபோல், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி. ஆசிரியையான இவர் கடந்த மாதம் (ஜூன்) வீட்டு முன்பு நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அவரை ஒரு மர்மநபர் தாக்கிவிட்டு தங்க சங்கிலியை பறித்து சென்றிருந்தார். இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில், ஆசிரியை சாந்தகுமாரியிடம் தங்க சங்கிலி பறித்ததாக பெங்களூரு ஸ்ரீநகரை சேர்ந்த குமார் (22) என்பவரை நெலமங்களா டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர், பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று, அவர்களிடம் தங்க சங்கிலி பறித்து விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரிந்தது. கைதான குமாரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டது. அவர் மீது நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story