பஞ்சாப் எல்லையில் பயங்கரவாதிகளுடன் சண்டை; எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்


பசவராஜ் கணபதி.
x
பசவராஜ் கணபதி.
தினத்தந்தி 8 July 2021 3:15 AM IST (Updated: 8 July 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.

பீதர்: பஞ்சாப் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். 

பீதரை சேர்ந்த வீரர்

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் அவுரா தாலுகா ஆலூர் பி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் கணபதி (வயது 31). இவர்  கடந்த 2013-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இந்தூரில் பயிற்சியை முடித்த அவர் கொல்கத்தா  மற்றும் திரிபுராவில் பணியாற்றினார். 

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பசவராஜ் பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் பணியாற்றி வந்தார். 

சண்டையில் வீரமரணம்

இதற்கிடையே நேற்று முன்தினம் பஞ்சப்பா எல்லையில் பயங்கரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையின் போது பசவராஜ கணபதி வீரமரணம் அடைந்தார். 

இந்த தகவலை ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பசவராஜா கணபதியின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

பெரும் சோகம்

மரணமடைந்த வீரர் பசவராஜ கணபதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் மஞ்சுளா. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. 

பசவராஜா கணபதிக்கு 2 சகோதர்கள் உள்ளனர். அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். பசவராஜா கணபதி இறந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Next Story