கர்நாடகத்தில் புதிதாக 2,743 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
75 பேர் உயிரிழந்தனர்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 66 ஆயிரத்து 631 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,743 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 62 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 75 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 3,081 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 87 ஆயிரத்து 111 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 603 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 611 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
19 மாவட்டங்கள்
மைசூருவில் 248 பேர், தட்சிண கன்னடாவில் 304 பேர், ஹாசனில் 220 பேர், குடகில் 170 பேர், சிவமொக்காவில் 149 பேர், துமகூருவில் 112 பேர், பெலகாவியில் 120 பேர், குடகில் 148 பேர், உடுப்பியில் 101 பேர், சிக்கமகளூருவில் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 12 பேரும், தட்சிண கன்னடாவில் 14 பேரும், மைசூருவில் 3 பேரும், பல்லாரியில் 7 பேரும் என மொத்தம் 75 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story