சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 July 2021 4:03 AM IST (Updated: 8 July 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 214 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 214 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 228 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 214 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சங்ககிரியில் 4 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஓமலூர் பகுதியில் தலா 5 பேர், காடையாம்பட்டியில் 6 பேர், மேச்சேரியில் 8 பேர், சேலம் ஒன்றிய பகுதிகளில் 9 பேர், தாரமங்கலத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதே போன்று பெத்தநாயக்கன் பாளைத்தில் ஒருவர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டியில் தலா 4 பேர், தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லியில் தலா 5 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். ஆத்தூர் நகராட்சி பகுதியில் 2 பேர், மேட்டூர் நகராட்சியில் 13 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். மேலும் நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 1,493 பேர் உயிர் இழந்து உள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story