வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை- 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்


வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை- 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 July 2021 4:22 AM IST (Updated: 8 July 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சேலம்:
வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் தாலுகா வனவாசியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு பட்டயப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரி புதிய கட்டிடங்கள், நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வருகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், கணினி பொறியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. 
 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க https://www.tngptc.in அல்லது https://www.tngptc.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் இயங்கும் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
 இணையதளம் மூலம் பட்டயப்படிப்பிற்கு வருகிற 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.150 மட்டுமே. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் மாணவர்கள் இது குறித்த தகவல்களை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். 
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story