எருமப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு ரெயில்வே ஊழியர் கைது


எருமப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு ரெயில்வே ஊழியர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 4:29 AM IST (Updated: 8 July 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு ரெயில்வே ஊழியர் கைது

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). விவசாயி. இவருக்கு, அதே பகுதியில் முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் சுமார் 75 சென்ட் நிலம் உள்ளது. அதன் அருகே அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (45) என்பவருக்கு சுமார் 60 சென்ட் நிலம் உள்ளது. நிலம் சம்பந்தமாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகுமார் தனது மனைவி வனிதாவுடன் (40) தனது நிலத்தின் அருகே நின்றார். அப்போது அந்த வழியாக வந்த சுதாகர் இந்த பகுதிக்கு நீங்கள் வரக்கூடாது என்று கூறி தகராறு செய்தாராம். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் தான் வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரின் கையில் வெட்டினார். தொடர்ந்து வனிதாவையும் அவர் தாக்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், வனிதாவை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதாகர் ெரயில்வே துறையில் ஊழியராக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story