கோவை-திருப்பதி சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கம்
கோவை-திருப்பதி சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:
கோவை -திருப்பதி (வண்டி எண் 06194) அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வாரத்தில் வியாழன், வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாயக்்கிழமைகளில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 8.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் வழியாக மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் திருப்பதி -கோவை (வண்டி எண் 06193) அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் வியாழன், சனி, திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் திருப்பதியில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு இரவு 7.37 மணிக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 10.45 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story