சேலம் வழியாக எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரெயில்
சேலம் வழியாக எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:
எர்ணாகுளம் -நிஜாமுதீன் (வண்டி எண் 06171) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 17-ந் தேதி முதல் சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு நள்ளிரவு 1.47 மணிக்கு வந்தடையும், பின்னர் இங்கிருந்து நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர் வழியாக 3-ம் நாள் மாலை 5.50 மணிக்கு நிஜாமுதீன் சென்றடையும்,
இதேபோல் மறுமார்க்கத்தில் நிஜாமுதீன்-எர்ணாகுளம் (வண்டி எண் 06172) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 2-ம் நாள் இரவு 7.22 மணிக்கு வந்தடையும், பின்னர் இங்கிருந்து இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடையும், இந்த ரெயில்கள் மறு தேதி அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story