நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,555 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,555 ஆக அதிகரிப்பு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 45,555 ஆக அதிகரித்து உள்ளது.
108 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45,447 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,555 ஆக அதிகரித்து உள்ளது.
ஒருவர் பலி
இதற்கிடையே நேற்று 221 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44 ஆயிரத்து 90 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 1,037 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 428 பேர் பலியாகி இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 427 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மங்களபுரத்தை சேர்ந்த 37 வயது நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 428 ஆக நீடித்து வருகிறது.
======
Related Tags :
Next Story