பெண்களின் முன்னேற்றத்திற்காக மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் மதிவேந்தன் பேச்சு


பெண்களின் முன்னேற்றத்திற்காக மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் மதிவேந்தன் பேச்சு
x
தினத்தந்தி 8 July 2021 5:57 AM IST (Updated: 8 July 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் முன்னேற்றத்திற்காக மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

ராசிபுரம்:
தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
ரூ.1.58 கோடி கடனுதவி
ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் பட்டு விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 36 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.58 கோடி கடன் உதவிகளையும், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 48 பட்டு விவசாயிகளுக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களையும் வழங்கினார்.
அமைச்சர் மதிவேந்தன்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:- முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி கடந்த 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2006-11-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மாவட்டம்தோறும் நேரடியாக சென்று ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி, பொருளாதார கடன் உதவிகளை வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமலும் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய ஆணை பிறப்பித்தார். மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
மகளிர் சுய உதவிக் குழு
இங்கே 36 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.58 கோடி நேரடி கடன் உதவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 48 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.52 ஆயிரத்து 500 மதிப்பில் பவர் டிரில்லர், புழு கூடுகட்டும் வலை, கம்பரசர், பவர் ஸ்பிரேயர், தண்டு அறுவடை எந்திரம் மற்றும் பட்டுக்கூடுகள் எடுத்துச் செல்லும் பை உள்பட ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
இதில் நாமக்கல் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், நகர செயலாளர் சங்கர், மாவட்ட தி.மு.க. பொருளாளர் வக்கீல் செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சந்திரா சிவகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், அருளரசன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் அரங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, பட்டு வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குனர் சந்திரசேகரன், உதவி இயக்குனர் முத்துப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story