பாலக்கரையில் பஸ் மீது கல்வீச்சு; 2 பேர் கைது


பாலக்கரையில் பஸ் மீது கல்வீச்சு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 8:26 AM IST (Updated: 8 July 2021 8:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாலக்கரையில் தனியார் பஸ் மீது கல்லை வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, 
திருச்சி பாலக்கரையில் தனியார் பஸ் மீது கல்லை வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் பஸ்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு பாலக்கரை வழியாக நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 2 வாலிபர்கள் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்க டிக்கெட் வாங்கி இருந்தனர்.

ஆனால் பஸ் நிறுத்தம் வந்ததும் 2 பேரும் கீழே இறங்காமல் பாலக்கரை மேம்பாலத்தில் பஸ்சை நிறுத்தி தங்களை இறக்கிவிடும்படி கூறினர். ஆனால் கண்டக்டர் அறிவானந்தம் பாலத்திலெல்லாம் பஸ்சை நிறுத்த முடியாது என்று கூறியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பஸ் மீது கல்வீச்சு

பின்னர் பஸ்சில் இருந்து கீழே இறங்கிய 2 பேரும் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் வீசினர். இதில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து கண்டக்டர் அறிவானந்தம் காந்திமார்க்கெட் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த நவாஸ் (வயது 19), முகமதுபகத் (19) என்பது தெரியவந்தது. இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story